இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்திரைக்கதை காணி நிலம்..7.3.'21

படம்
காணி நிலம் பார்வதி அந்த கிராமத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவள். அவள் கணவர் முனுசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை வடிவேலன்.  அவனுக்குசிறுவயது முதலே பிடிவாதம் கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. பார்வதி எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான். வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை. முனுசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் உடல்நிலை மோசமாகியது. பார்வதி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஊதாரியாகத் திரிந்தான்.  முனுசாமி பார்வதியிடம் "பார்வதி. பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா...