இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்திரக்கதை

படம்
  சித்திரக்கதை எண்..2961 12.4.2021 கலெக்டர் முத்துமணி அன்று ஞாயிற்றுக் கிழமை. அழகாக ஓடிக் கொண்டிருந்த அந்த ஆற்றின் எதிர்க் கரையில் பெரிய தொழிற்சாலை  உருவாக நதியும் காற்றும் மாசுபட்டது. ஆனால் அந்த தொழிற்சாலை இன்று  பலருக்கு வேலை கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியது. அங்குதான் பெருமாள் வேலை செய்கிறான்.  ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவன் வலையில் சிக்கிய  மீன்களைப்  கூடையில் போடத் திரும்பும்போது  ஒரு ஆண் குழந்தை ஆற்று நீரில் விளையாடுவதைக் கண்டான். "யாரு கண்ணு நீ? உங்கப்பா எங்கே?" என்று கேட்டான். அந்தக் குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களைக் கேட்டபோது யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிட, அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் கிளம்பியபோது அந்தக் குழந்தை இவனுடன் தானும் வருவேன் என்பதை வேறு மொழியில் கூறியபடி கையைப் பிடித்துக் கொண்டது. கண்ணுக்கெட்டியவரை எந்த மனிதரையும் காணவில்லை.. யாரோ வெளிமாநிலத்தவர் இங்கு வந்தபோது குழந்தையை விட்டுச் சென்று விட்டார்களோ? பெருமாளுக்கு குழந்தையை உடன் அழைத்துச் செல்வதா, விட்டுப் போய்விடலாமா என்று ஒரே குழப்பம். தி