சித்திரக்கதை
நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை 14.6.2021 எண்..2961 பிணைந்த கைகள் ஆட்டோவிலிருந்து அந்த ஆசிரம வாயிலில் இறங்கிய ஸாரா வேகமாக அறைக்குச் சென்று விட்டாள். அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந் தது. உள்ளேவந்தசெலினா ...என்னாச்சு ஸாரா? ஏன் அழுகிறாய்? பிரபு எங்கே? ஏதாவது பிரச்னையா?... என்றார். அவர் மடியில் சரிந்தவள் துக்கம் தாங்காமல் அழுது விட்டாள். ஆங்கிலோஇந்தியப் பெண்ணான ஸாராவின் தாய் இந்த ஆச்ரமத்தில் இருந்தவள், ஸாரா பிறந்த ஆறுமாதத்தில் இறந்து விட்டாள். அதுமுதல் செலினாதான் அவளை வளர்த்து வருகிறாள். ஸாரா ஆசிரமத்திலேயே குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு கணக்குகளையும் பார்த்து வந்தாள். பிரபு ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறான். அவனுடைய அதிகாரியுடன் இந்த ஆசிரமத்துக்கு வந்தவன் மாதாமாதம் ஒரு தொகையை ஆசிரமத்துக்கு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். சாராவின் அழகும் சுறுசுறுப்பும் அங்குள்ளோரிடம் அவள் காட்டும் பாசமும் நேசமும் பிடித்துப் போக அவளிடம் காதல் ஏற்பட்டது. ஆசிரமம் வரும்போதெல்லாம் தோட்டத்திலிருந்த ஒரு திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பிரபு அ...