சித்திரக்கதை

 



நிலாமுற்றம் கதைக்களம்

சித்திரக்கதை
14.6.2021
எண்..2961
பிணைந்த கைகள்

ஆட்டோவிலிருந்து அந்த ஆசிரம வாயிலில் இறங்கிய ஸாரா வேகமாக அறைக்குச் சென்று விட்டாள். அவள்
உடம்பு நடுங்கிக் கொண்டிருந்
தது. உள்ளேவந்தசெலினா
...என்னாச்சு ஸாரா? ஏன் அழுகிறாய்? பிரபு எங்கே? ஏதாவது பிரச்னையா?...
என்றார். அவர் மடியில்  சரிந்தவள் துக்கம் தாங்காமல் அழுது விட்டாள்.

ஆங்கிலோஇந்தியப் பெண்ணான ஸாராவின் தாய்  இந்த ஆச்ரமத்தில் இருந்தவள், ஸாரா பிறந்த ஆறுமாதத்தில்  இறந்து விட்டாள். அதுமுதல் செலினாதான் அவளை வளர்த்து வருகிறாள்.  ஸாரா ஆசிரமத்திலேயே குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு கணக்குகளையும் பார்த்து வந்தாள்.

பிரபு ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறான். அவனுடைய அதிகாரியுடன் இந்த ஆசிரமத்துக்கு வந்தவன் மாதாமாதம்  ஒரு தொகையை ஆசிரமத்துக்கு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். சாராவின் அழகும் சுறுசுறுப்பும் அங்குள்ளோரிடம் அவள் காட்டும் பாசமும் நேசமும் பிடித்துப் போக அவளிடம் காதல் ஏற்பட்டது. ஆசிரமம் வரும்போதெல்லாம் தோட்டத்திலிருந்த ஒரு திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

பிரபு அவளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூற, ஸாரா தயங்கினாள்.
"எனக்கு அப்பா இல்லை. எனக்கு என் மாமா பெண்ணைத் திருமணம் செய்வதாக  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு அதில் இஷ்டமில்லை. " என்றான்.

மறுநாளே அம்மா பவானியிடம் கேட்க, அவள் இரண்டு நாள் அவனுடன் பேசவில்லை.  பிறகு என்ன நினைத்தாளோ திருமணத்திற்கு சம்மதம் என்றாள்.

ஒரு நல்ல நாளில் மிக எளிமையாக திருமணம் நடந்தது. ஸாரா வந்தது முதலே மிகவும் அன்பாகப் பழகினாள். பவானியை எந்த வேலையும் செய்ய விடாமல் தானே செய்தாள். அடுத்த தெருவில் இருக்கும் பவானியின் அண்ணி சரஸு அடிக்கடி வருவாள். அவளுக்கு ஸாராவைக் கண்டாலே பிடிக்காது. பிரபுவை மருமகன் ஆக்கிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரம்.

பிரபுவின் அன்பிலும் காதலிலும் ஸாரா சந்தோஷமாக இருந்தாலும் அடிக்கடி ஆசிரம நினைவு வரும்.  இடையில் ஸாரா கர்ப்பமானாள். பிரபுவைத் தவிர யாரும் அதற்காக சந்தோஷப் படவில்லை.

அச்சமயம் பிரபுவுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு மூன்று மாத ப்ராஜக்டிற்காக  செல்ல வேண்டியதாயிற்று. ஸாராவுக்கு மசக்கை  அதிகமானதால் மிகவும் சிரமப் பட்டாள்.  அவளை பவானியும்,சரஸுவும் கேவலமாகப் பேசினாலும் ஸாரா பிரபுவுக்காக எல்லாம் பொறுத்துக் கொண்டாள்.

அன்று மதியம் வேலை முடித்து  பவானி அறை அருகில் வந்தவள் உள்ளே பவானியும் சரஸுவும் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.
பவானியிடம் சரஸு,"அந்த ஓடுகாலியோட  கர்ப்பம் கலைய ஒரு நாட்டு மருந்து வாங்கி வந்திருக்கேன். அதை அவளுக்கு தெரியாம சாப்பாட்டுல கலந்து போடு. ஆறு மணி நேரத்தில கர்ப்பம் கலைஞ்சுடும். அதை சாக்கா வச்சு அவளை அந்த ஆசிரமத்துக்கு விரட்டிடலாம். பிரபுகிட்ட அவ சண்டை போட்டு போயிட்டதா சொல்லலாம்"
என்று சொன்னதைக் கேட்ட ஸாரா பயத்தில் உடல் நடுங்க தன் மொபைலைக்கூட எடுத்துக் கொள்ளாமல் 
ஆசிரமத்துக்கு வந்துவிட்டாள்.
இதைக் கேட்ட செலினா மிகவும் வருத்தப் பட்டாள்.

அன்று மாலை ஸாரா வீட்டில் இல்லாதது தெரியவர பிரபுவுக்கு ஃபோன் செய்து"நீ கல்யாணம் செய்து கொண்டவள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள்"என்று சொல்லியதோடு, அவள் மொபைலையும் எடுத்து குப்பையில் போட்டு விட்டார்கள்.

பிரபு பலமுறை ஸாராவுக்கு ஃபோன் செய்தும் ..அது செயலில் இல்லை..என்று வர, ஆசிரமத்துக்கு ஃபோன் செய்தான். செலினாவிடம் ஸாரா பற்றி கேட்க அவளும் எல்லா விஷயங்களையும் சொல்லி விட்டாள். பின் ஸாராவிடம் பேச வேண்டும் என்று சொல்ல அவள் பெரிதாக அழுதாளே தவிர எதுவும் பேசமுடியவில்லை.

பிரபுவுக்கு தன் அம்மாவை நினைத்து  இவ்வளவு வருத்தமாக இருந்தது. இரண்டு நாளில் கிளம்பி வந்தவன்  வீட்டுக்கு போய் அம்மாவிடம்,
"நீயும் ஒரு பெண்தானே? எப்படி உன்னால் இப்படியெல்லாம் நடக்க முடிகிறது. எனக்கு பிடித்தவளை திருமணம் செய்து கொண்டதற்கு அவளுக்கு ஏன் கஷ்டம் தர வேண்டும்?"

"அவ சரியில்லை" என்று அம்மா ஆரம்பிக்க  அவன்,
"பேசாதம்மா. எனக்கு ஆஸ்திரேலியாவிலேயே வேலை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். நீ நிம்மதியாக இரு. நான் அவளுடன் ஆஸ்திரேலியா செல்கிறேன்".

சொன்னவன் பதிலை எதிர்பார்க்காமல் நேராக ஆசிரமம் சென்றான். ஸாரா அந்தத் திண்ணையில் அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவளை ஆதரவாக அணைத்தவன்,
எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு தன் தாய்க்காக அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
'விரைவில் ஆஸ்திரேலியா செல்ல தயாராக இரு' என்றவன் செலினாவிடம் அவளை டாக்டரிடம் அழைத்துப் போய் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னான். பிரபுவின் அன்பை எண்ணி மகிழ்ந்தவள் அவனது கைகளை விட மனமின்றி பிணைத்துக் கொண்டாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மந்திரக்கதை

நுண்கதை