சித்திரக்கதை
நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை பதிவு எண்..2961 14.8.2021 இன்னா செய்தாரை... ஐந்தாவது படிக்கும் குமாரிக்கு மறுநாள் காலாண்டு பரீட்சை. படிப்பதற்கு நிறைய இருந்தது. அவள் அம்மா கண்ணாயி நான்கு வீடுகளில் வேலை செய்கிறாள்.தன் வீட்டு வேலை செய்ய நேரமில்லை. குமாரிதான் காலை எழுந்து வாசல் தெளிப்பதிலிருந்து சமையல் உட்பட அத்தனை வேலைகளும் செய்வாள். கண்ணாயிக்கு திருமணமாகி இசக்கிமுத்துவுடன் குடித்தனம் நடத்திய நாட்களில் மிக நல்லவனாக அன்போடும் காதலோடும்தான் இருந்தான். அதன் அடையாளமாக பிறந்தவளே குமாரி. இடையில் ஏற்பட்ட குடிப்பழக்கம் அவனை வேறு மனிதனாக மாற்றியது. தடுத்த கண்ணாயி அவனுக்கு எதிரியாகத் தெரிய, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுடன் வாழத் தொடங்கினான். எத்தனையோ பேர் கண்ணாயி சார்பாக அவனிடம் பேசியும் மாறாத இசக்கியை விலக்கிவிட்டு மகளுடன் தனியாக வாழத் தொடங்கினாள் கண்ணாயி.இசக்கியின் குணம் பற்றி அறிந்த குமாரி தான் பெரியவளானதும் அம்மாவை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணுவாள். குமாரிக்கு படிப்பு நன்றாக வந்தது. எதையும் ஒருமுறை படித்தால் அப்படியே மனனம் செய்யும் திறமை அவளுக்கு...