நுண்கதை

 நுண்கதை

எண்..2961
29.4.2021
அன்னையர் தினம்

அம்புஜத்திற்கு வயது எழுபது. மாதா மாதம் ரேஷன் கடையில்  வரிசையில் நின்று சாமான்களை  வாங்கிவர வேண்டியது அவள் வேலை. உடல் தள்ளாடும் வயதில் பசியுடன் நல்ல வெயிலில் நிற்பது எப்படி முடியும்? சாமான்களை வாங்கிப் போனால்தான் அவளுக்கு சாப்பாடு. முடியவில்லை என்றாலோ தண்டச்சோறு என்று மருமகள் வார்த்தைக
ளாலேயே கொன்று விடுவாள். 

ஒரு காலத்தில் வசதியாக இருந்தவள்தான் அம்புஜம். அன்பான கணவர். ஒரே மகன். அவன் பிறந்த சில மாதங்களில் கணவர் இறந்துவிட, பிறந்த வீட்டார் உதவியுடன் தனியாக நின்று வளர்த்தாள். அவனோ பொறுப்பில்லாதவனாக வளர்ந்தான். படிப்பும் வராமல் பத்தாம் வகுப்புடன் நின்று விட்டான். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேன் வேலை.

அவன் மனைவிக்கு கொடுத்த மரியாதையை தாய்க்கு கொடுக்கவில்லை. பெற்ற தாய் என்ற பரிவு கூட கிடையாது. இவள் முறை வந்து சாமான்கள் வாங்க இரண்டுமணி நேரமாயிற்று.  காலையில் குடித்த கஞ்சி எப்பவோ ஜீரணமாகி வயிறு கபகபவென்று பசித்தது. 

போகும் வழியிலிருந்த ஆலயத்தில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் வரிசை. ஓய்ந்துபோய் நின்றவளின் அருகில் வந்த ஒரு மனிதர் அவளிடம் ஒரு சாப்பாடு பொட்டலம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். 'நீங்க மகராசனா இருக்கணும் சாமி' என்ற அம்புஜம், 'இன்று என்ன விசேஷம்?' என்றாள்.

'இன்னிக்கு அன்னையர் தினம்மா. அம்மாக்களை கொண்டாடும் நாள். வயிறு நிறைய சாப்பிடுங்க' என சொல்ல, அவர் உருவத்தில் தன் மகனையே கண்டாள் அம்புஜம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கை_ஒளி

ஓடினாள்.. ஓடினாள்..

சித்திரக்கதை