இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நுண்கதை

படம்
  நுண்கதை எண்..2961 29.4.2021 அன்னையர் தினம் அம்புஜத்திற்கு வயது எழுபது. மாதா மாதம் ரேஷன் கடையில்  வரிசையில் நின்று சாமான்களை  வாங்கிவர வேண்டியது அவள் வேலை. உடல் தள்ளாடும் வயதில் பசியுடன் நல்ல வெயிலில் நிற்பது எப்படி முடியும்? சாமான்களை வாங்கிப் போனால்தான் அவளுக்கு சாப்பாடு. முடியவில்லை என்றாலோ தண்டச்சோறு என்று மருமகள் வார்த்தைக ளாலேயே கொன்று விடுவாள்.  ஒரு காலத்தில் வசதியாக இருந்தவள்தான் அம்புஜம். அன்பான கணவர். ஒரே மகன். அவன் பிறந்த சில மாதங்களில் கணவர் இறந்துவிட, பிறந்த வீட்டார் உதவியுடன் தனியாக நின்று வளர்த்தாள். அவனோ பொறுப்பில்லாதவனாக வளர்ந்தான். படிப்பும் வராமல் பத்தாம் வகுப்புடன் நின்று விட்டான். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேன் வேலை. அவன் மனைவிக்கு கொடுத்த மரியாதையை தாய்க்கு கொடுக்கவில்லை. பெற்ற தாய் என்ற பரிவு கூட கிடையாது. இவள் முறை வந்து சாமான்கள் வாங்க இரண்டுமணி நேரமாயிற்று.  காலையில் குடித்த கஞ்சி எப்பவோ ஜீரணமாகி வயிறு கபகபவென்று பசித்தது.  போகும் வழியிலிருந்த ஆலயத்தில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் வரிசை. ஓய்ந்துபோய் ...

அம்மா அம்மாதான்! எண்..2961

படம்
அம்மா அம்மாதான்! எண்..2961 30.5.'21 அம்மா அம்மாதான்! ஊருக்கு போய் வந்தது முதல் தருண் மனம் அம்மாவின் நினைவிலேயே இருக்கிறது. சென்ற மாதம் அவன் தாத்தா பாட்டியின் சதாபிஷேகம். வீடு முழுதும் உறவுகள்.தருணின் அக்காவும் திருமணமாகி வெளிநாட்டு வாசம்.  ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தருணுக்கு  திருமணமாகவில்லை. அவன் அம்மாபிள்ளை.  சதாபிஷேகத்திற்கு உறவினர்கள் பலர் வந்திருந்ததால் வீட்டோடு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்திருந்தாள் அவன் அம்மா லட்சுமி. இன்றுதான் எல்லோரும் கிளம்பிச் சென்றபின் 'அப்பாடா' என்று சற்று கால் நீட்டி அமர்ந்தாள். தருண் வந்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான்.  'என்னடா வேண்டும்? நாலஞ்சு நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டயா? அங்கதான் நீயே ஏதோ பண்ணி சாப்பிடறயே. ' 'அட போம்மா. நான் அதுக்காகவா வந்தேன். உன் கையால ஒரு  பூண்டுரசம்  சாதம் சாப்பிடணும்.அந்த ருசி எதில?' 'அட அசடே..அதான் டல்லா இருக்கியா? இதோ சாயந்திரமே பண்ணிப் போடறேண்டா'. 'அம்மா..கூடவே அந்த கத்தரிக்காய் ரசவாங்கியும் பண்ணிடு.'இது பெண் பூரணியின் ஆர்டர். அம்மாவின் கைமணத்துக்கு இணையேது?

மந்திரக்கதை

படம்
  நிலா முற்றம் கதைக்களம் மந்திரக்கதை எண்..2961 20.4.'21 மந்திரவாதி மகேந்திரன் மாயாஜால மன்னன் மந்திரவாதி மகேந்திரன் மேஜிக் செய்வதில் மிகவும் திறமைக்காரன். பி.காம் படித்தும் தன் அப்பாவின் வாக்கைக் காப்பாற்ற இதுவரைவேறு வேலைக்கு செல்லாமல் மேஜிக்கையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான்.  அவனுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எல்லோருமே மேஜிக்கில் சிறப்பு பெற்றவர்கள். வெறும் கையைத் திறந்தால் வரும் புறா, காலிப் பெட்டியில் பெண், வெறும் கையை மூடித் திறந்தால் கொட்டும் சாக்லேட் என நிறைய மந்திர தந்திரக் காட்சிகள் பார்ப்பவரை மெய் மறந்து கண் விரியப் பார்க்க வைக்கும்.  முன்பெல்லாம் மேஜிக்குக்கு இருந்த பெருமை தற்காலத்தில் இல்லை. மாதம் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகள், அலுவலகங்களில் மேஜிக் ஏற்பாடு செய்கிறார்கள். இப்பொழுதுதான் சிறு குழந்தை கூட கையில் மொபைலில் காட்சிகளை மாற்றி மாற்றி மேஜிக் செய்கிறார்களே! மகேந்திரனுக்கு சொந்தமாக வீடு இருந்தது. அவன் மனைவி பள்ளி ஆசிரியை.ஒரே மகன்  நரேன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.  முன்பெல்லாம் மகேந்திரன் அசல் மந்திரவாதி போன்றே கையில் விசிறி, மந...

மகளிர் தினம் - சித்திரக்கதை

படம்
  மகளிர் தினம் 14.3.'21 எண்..2961 மகளிர் தினம் வேலைகளை முடித்து    மொபைலில்  வாட்ஸப்பில் கண்களை பதித்த வித்யா மகள் சுனிதாவிடமிருந்து வந்த மெஸேஜைப் பார்த்தாள். அது ஒரு ஓவியம். அச்சுஅசலாக தன்னைப் போலவே இருந்த அந்தப் பெண் இடது கையில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே  சமைப்பது போல் வரையப் பட்டிருந்தது. கீழே வனிதாவின் கையெழுத்து. 'அட..எவ்வளவு தத்ரூபமா என்னை வரைஞ்சிருக்கா' என்ற மகிழ்ச்சி வித்யாவுக்கு. கூடவே ஒரு வருத்தம், 'என்னைப் பற்றி இவளுக்கு இதுக்கு மேல் தெரியவில்லையே' என்று. வித்யா சிறு வயதில்  சகலகலாவல்லி என சொல்லுமளவு பரத நாட்டியம், சங்கீதம், ஓவியம், கைவேலை என்று அத்தனையிலும் தேர்ச்சி பெற்றதுடன் அவற்றில் பங்கு பெற்று நிறைய பரிசுகளும் வாங்கியிருக்கிறாள். டிகிரி முடித்ததும் அவள் அப்பா திருமணம் முடித்ததோடு, புக்ககத்தார் அனுமதித்தால் வேலைக்குப் போகும்படி சொல்லிவிட்டார்.  அவள் கணவன் ஆனந்த் ஒரே பிள்ளை. திருமணத்திற்குப் பின் அவள் வேலைக்கு செல்வதை அவள் மாமியார் விரும்பவில்லை.  ஆனந்தும் அதிகம் பேசுவதில்லை என்பதோடு அவளுடைய ஆசைகளையோ விருப்பங்களையோ கேட்டதே க...

இணைந்த மன(த)ங்கள்

படம்
  நுண்கதை இணைந்த மன(த)ங்கள் 29.3.2021 எண்..2961 "அமீத்பாய்..நல்லா இருக்கீங்களா?" "வாப்பா மணிகண்டா. நல்லா இருக்கேன்பா. நீ நலமா? வீட்டில எல்லாரும் சுகமா?" "எல்லாரும் நலம்.  ஒரு ஆஞ்சநேயர் படம் வேணும்." "இந்தா இந்தப்படம் வச்சுக்க.  அதிவீரபராக்ரம ஆஞ்சநேயர். எந்த பயமும் கஷ்டமும் வராது." "அதெப்படி பாய். நான் சொல்லாமலே கஷ்டம் வராதுனு சொல்றீங்க. கொஞ்ச நாளா மனசுல ஒரு குழப்பம். அதான்...ஹனுமான் படம் வாங்கி கும்பிடலாம்னு கேட்டேன்". "நான் ஒரு சின்ன தோத்திரம் எழுதித் தரேன். அதை தினமும் சொல்லு". "உங்களுக்கு எப்படி இதல்லாம் தெரியும்? நீங்க முகமதியராச்சே?" "நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்க வீட்டு பக்கத்தில ஒரு கோவில் குருக்களய்யா குடியிருந்தாரு. நானும் அவர் பையன் சபேசனும் ஒரே வகுப்புல படிச்சிட்டிருந்தோம். நான் அவங்க வீட்டுலதான் நிறைய நேரம் இருப்பேன். "அந்த ஐயா நிறைய கதை சொல்வாரு. நல்ல நல்ல விஷயங்கள் சொல்வாரு. அவர்தான் இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு. நான் இந்தக் கடை வைக்க காரணமே அதுதான்." "நீங்க சொல்...

அம்மா

படம்
  சித்திரக்கதை எண்...2961 14.5.2021 அம்மா.. காரில் சென்று கொண்டிருந்த ஆனந்திற்கு தனக்கு முன்னால் சைக்கிளை குரங்குப்பெடல் செய்து கொண்டு ஓட்டிச்சென்ற சிறுவனைப் பார்த்தபோது மனதில் ஏதோ ஒரு சலனம். தான் இதேபோல் சைக்கிள் ஓட்டிய நினைவு வந்தது. கூடவே அவன் அம்மாவின் நினைவும் வந்தது. அம்மா இவனுடன் இருந்தபோது தினமும் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படி இல்லை. மனதில் அம்மாவின் நினைவுகள் அடுக்கடுக்காய் வந்தது. அவன் அம்மா சுந்தரி அப்பா மாணிக்கம் இருந்தவரை வீட்டை கவனித்துக் கொண்டிருந்தாள். அப்பாவுக்கு ஒரு பெரிய கம்பெனியில் வாட்ச்மேன் வேலை.  நல்ல சம்பளம். மனைவி, பிள்ளையிடம் பாசம் அதிகம். ஆனந்த் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே,' நீ பெரிய படிப்பு படித்து இன்ஜினியர் ஆக வேண்டும்' என்பான். ஒருநாள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த பேருந்து இடித்ததில் தடுமாறி விழுந்தவனுக்கு தலையில் பலத்தஅடி. விஷயம் கேட்டு மருத்துவமனைக்கு ஓடிய சுந்தரியிடம் சற்று நினைவு வந்தபோது பேசிய மாணிக்கம், 'நான் பிழைக்க மாட்டேன் சுந்தரி. என் கம்பெனியிலிருந்து உனக்கு பணம் கிடைக்கும். நம்ம பிள்ளையை ந...

மலையரசனும் மந்திரவாதியும்..

படம்
  #மந்திரக்கதை மலையரசனும்மந்திரவாதியும்.. என்..2961 21.5.'21 அந்த சிறு கிராமத்தில் வரிசையாக வீடுகள். தூரத்தில் இருந்த அந்த மலையைப் பார்த்தால் அதில் வளர்ந்துள்ள செடி கொடிகளும் பாறைகளும் ஒரு மனிதன் தலையில் துண்டால் போர்த்திக் கொண்டு புன்னகை புரிவது போல் இருக்கும்! வாசு அவன் தாத்தா பாட்டி ஊருக்கு அடிக்கடி விடுமுறைக்கு வருவான். பக்கத்திலுள்ள நகரத்தில் அவன் தந்தை பணி புரிந்து கொண்டிருந்தார். இங்கு அவனுக்கு நான்கைந்து நண்பர்கள் உண்டு. எல்லாருமாக நாள் முழுதும் விளையாடுவதும் ஊரைச் சுற்றுவதுமாக பொழுதைக் கழிப்பார்கள். அந்த மலைப் பக்கம் மட்டும் போகக் கூடாது என்று பெரியவர்கள் எச்சரித்தாலும், அங்க போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு அதிகமாயிற்று. ஒருநாள் வாசு அவன் நண்பர்களுடன் அந்த மலைப் பக்கம் போக ஒரு திட்டம் போட்டான். அந்த ஊருக்கு பக்கத்து ஊரில் இருக்கும் நண்பன் வீட்டுக்கு சென்று தங்கி வருவதாகக் கூறி எல்லா நண்பர்களும் மாலை கிளம்பினார்கள். கையில் தண்ணீர் சில தின்பண்டங்களுடன் சென்றவர்கள் அந்த மலை அடிவாரம் சென்று பார்த்தபோது யாரும் அங்கு செல்லாததால் பசுமையாக அழகாக இருந்தது. பௌர...

தந்திரக்கதை

படம்
ஆவி வீடு..😖 27.3.'21 எண்..2961 அது ஒரு அழகிய கிராமம். சுதாகரன் அந்த ஊருக்கு பணிமாற்றத்தில் வந்திருந்தான். அங்கு குடியிருக்க வீடு பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் பூட்டியிருந்த அந்த வீடு பட்டது. அக்கம்பக்கம் இருந்தவர் களிடம் அதுபற்றி விசாரித்தான்.  பல வருடங்களுக்கு முன்பு யாரோ தற்கொலை செய்து கொண்டதால் அங்கு அந்த ஆவி உலவிக் கொண்டிருப் பதாகவும், அதில் யாரும் குடியிருப்பதில்லை என்றும் அறிந்து கொண்டான். அதன் சொந்தக் காரர்கள் வெளிநாட்டில் இருப்பதால்  ஒரு தரகரிடம் விற்க சொல்லியிருந்தும் பயத்தில் யாரும் அந்த வீட்டை வாங்கத் தயாராக இல்லை. சுதாகருக்கு இந்த ஆவி விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அந்த தரகர் வீடு சென்று தான் குடியிருக்க அந்த வீடு தரமுடியுமா என்றான். அந்தத் தரகர் எதுவும் பிடி கொடுத்து பேசாததோடு அங்கு இறந்தவரின் பேய் இரவில் வந்து உலவுவதாகவும், அங்கு வாழ்ந்தவர்களை பயமுறுத்துவதால் யாரும் குடிவருவதில்லை என்றார்.  சுதாகர் வற்புறுத்திக் கேட்டதால் சாவியுடன் அந்த மனிதரும் உடன் வந்தார். அங்கு ஒரு அறை மட்டும் பூட்டியிருக்க, அதுதான் ஆவி வாழும் அறை என்றும் திறக்க சாவியில்ல...

மந்திரக்கதை

படம்
  புதிய உலகம் 21.3.2021 எண்.2961 அது ஒரு குக்கிராமம். அங்கிருந்த ராமுவுக்கு ஒரே பிள்ளை கோபு. அவனுக்கு பத்து வயது இருக்கும்போதே அவன் தாய் இறந்துவிட, குழந்தையை வளர்க்க ராமு செங்கமலத்தை திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு கோபுவைச் சிறிதும் பிடிக்காது.அவனை மிகவும் துன்புறுத்துவாள். அவனை எப்படியாவது வீட்டிலிருந்து விரட்டிவிட  நினைத்தவள் பக்கத்திலிருந்த ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்துவிட்டாள். அங்கு சில சூனியக்காரிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டவள் அவர்களிடம் மாட்டிக் கொண்டு திரும்ப வர மாட்டான் என்ற நம்பிக்கையில் ராமுவிடம் 'கோபு காட்டுக்குப் போக அடம் பிடித்ததால் அழைத்துச் சென்றதாகவும் வழியில் காணாமல் போய்விட்டதாகவும்' பொய் சொல்லிவிட்டாள். கோபு வழி தெரியாமல்   அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றான். அங்கு ஒரு இளம்பெண் இருந்தாள். "வாவா! யாராவது வருவார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்." "நீங்க யார்? எப்படி இந்தக் காட்டில் தனியாக இருக்கிறீர்கள்?" "நான் ஒரு ராஜகுமாரி. என்பெயர் தேவசேனா. இது ஒரு சூனியக்காரி வீடு. அவளுக்கு விதவிதமாய் சாப்ப...

நம்பிக்கை_ஒளி

படம்
  முத்திரைக்கதை எண்..2961 7.4.2021 #நம்பிக்கை_ஒளி ஸ்ருதியும் ஸ்ரவணும் தினமும் பள்ளிக்கு நடந்துதான் செல்வார்கள். அன்று ஸ்ருதி வரும் வழியில் கண்ட காட்சி அவளை ஆச்சரியப் படுத்த ஸ்ரவணிடம்..அண்ணா அந்த அங்கிள் ரிக்க்ஷாவை எப்படி இழுத்துட்டு போறார் பாரேன்! பாவமில்ல.. ..ஆமாம். இது மாதிரி நாம பார்த்ததே இல்லயே.. இந்த விஷயத்தை அம்மா லக்ஷ்மியிடம் சொல்ல அவளோ முன்பெல்லாம் மனிதர் இழுக்கும் ரிக்க்ஷாக்கள் உண்டு என்றாள். அன்று இரவு ஸ்ருதிக்கு அதே நினைவு. பாவம் அந்த அங்கிள். இப்படி இழுத்தால் கை வலிக்காதோ என்று எண்ணியபடி தூங்கி விட்டாள். மறுநாள் இருவரும் பள்ளியிலிருந்து வீடுவரும்போது அதே ரிக்க்ஷா தெருவோரம் நின்று கொண்டிருந்தது.  இருவரும் அவரிடம் சென்று விசாரித்தனர். ..உங்க பேர் என்ன அங்கிள்? நீங்க எங்க இருக்கீங்க?.. ..என்பேரு ஹரிராம். நீங்க எந்த ஸ்கூல்ல படிக்கறீங்க?.. ..இங்க பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல. நீங்க ஏன்  இப்படி கஷ்டப்பட்டு இந்த ரிக்க்ஷாவை இழுக்கறீங்க. உங்களுக்கு கால், கை எல்லாம் வலிக்கலியா?.. ..ஆமாம் கண்ணுங்களா. என்ன செய்யற்து.. ..எங்களை இந்த ரிக்க்ஷால தினமும் ஸ்கூலுக்கு க...

பிரகாஷும் நாய்க்குட்டியும்!

படம்
  தந்திரக்கதை எண்..2961 25.4.2021 பிரகாஷும் நாய்க்குட்டியும்! அந்த வீடு அல்லோலகல்லோ லப் பட்டது. பள்ளிக்குச் சென்ற ப்ரகாஷ் மாலை வீடு திரும்பவில்லை. ப்ரகாஷின் அப்பா ரவி அரசுப் பணியாளர். நகரிலிருந்து சற்று வெளிப் புறத்தில் தனி வீடு. ப்ரகாஷ் அந்நகரின் பிரபலமான கான்வென்ட் பள்ளியில் இரண்டாம்  வகுப்பில் படிக்கிறான். பள்ளிப் பேருந்தில் தினமும் சென்று வருபவன், அன்று மாலை பள்ளியிலிருந்து திரும்பவில்லை. அவன் அம்மா மாலா பிள்ளை வரவில்லை என்றதுமே பள்ளிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, அங்கு எந்தக் குழந்தையும் இல்லை என்றார்கள். அவள் அழுது கொண்டே  மயங்கிவிட்டாள். ரவிக்கு விஷயம் தெரியவர, அவர் உடன் வீடு திரும்பி போலீஸில் புகார் செய்தார். அவர்களும் வீட்டிற்கு வந்து விபரங்களைக் கேட்டு,  கண்டு பிடித்து விடுவதாக சொன்னார் கள். இரண்டு நாளாகியும் எந்தத் தகவலும் தெரிய வில்லை. ரவி  இன்ஸ்பெக்டரிடம்,  'இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை? என் மகன் உயிரோடு இருப்பானா' என்று கோபமாகக் கேட்டார். இன்ஸ்பெக்டர் சேகருக்கு குழந்தையை யாராவது  கடத்திச் சென்றிருப்பார்களோ என்ற சந்தேகம்...

எதிர்காலம்

படம்
  முத்திரைக்கதை எதிர்காலம் 6.5.'21 எண்..2961 #எதிர்காலம் அருணாசலத்திற்கு கிளி ஜோசியம் பார்ப்பது தொழில். முப்பது வருடங்களாக இந்தத் தொழில் தான் அவன் வாழ்க்கையின் ஆதாரம்.அவன் அப்பா  இறுதிவரை இந்தக் கிளி ஜோசியம் பார்த்துதான் வாழ்க்கை நடத்தினார். இவனைப் படிக்க வைத்து ஒரு நல்லவேலைக்கு அனுப்ப ஆசைப்பட்டார். இவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. அவன் அப்பா போலவே கிளி ஜோசியம் சொல்வதில் தேர்ச்சி பெற்றான். நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு அப்பாவுடன் சென்று விடுவான். அவன் மனைவியும் தாயும் வீட்டு வேலைகளுக்கு சென்று சம்பாதிப்பார்கள். இரண்டு குழந்தைகள் நான்காம் வகுப்பும், முதல் வகுப்பும் படிக்கிறார்கள். ஓட்டு வீடு ஒன்று சொந்தமாக இருக்கிறது. ஏதோ சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாத வாழ்க்கை. தினமும் காலை எட்டு மணிக்கு கிளம்பி வந்து இங்கு உட்கார்ந்தால் மாலை ஏழு மணிக்குதான் வீடு திரும்புவான்.  ஜோசியம் நல்லபடி நடந்தால் அவன் சொல்லியது நடந்தவர்கள், தமக்கு தெரிந்தவரையும் அனுப்புவர். யாராவது ஜோசியம் கேட்பவர்கள் வருவார்களா என்று பார்த்தவன்,  அவன் மகன் சரவணன் வேகமாக வருவதைப் பார்த்தான். "...