பிரகாஷும் நாய்க்குட்டியும்!

 





தந்திரக்கதை

எண்..2961
25.4.2021

பிரகாஷும் நாய்க்குட்டியும்!

அந்த வீடு அல்லோலகல்லோ
லப் பட்டது. பள்ளிக்குச் சென்ற ப்ரகாஷ் மாலை வீடு திரும்பவில்லை. ப்ரகாஷின் அப்பா ரவி அரசுப் பணியாளர்.
நகரிலிருந்து சற்று வெளிப்
புறத்தில் தனி வீடு. ப்ரகாஷ் அந்நகரின் பிரபலமான கான்வென்ட் பள்ளியில் இரண்டாம்  வகுப்பில் படிக்கிறான்.

பள்ளிப் பேருந்தில் தினமும் சென்று வருபவன், அன்று மாலை பள்ளியிலிருந்து திரும்பவில்லை. அவன் அம்மா
மாலா பிள்ளை வரவில்லை என்றதுமே பள்ளிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, அங்கு எந்தக் குழந்தையும் இல்லை என்றார்கள். அவள் அழுது
கொண்டே  மயங்கிவிட்டாள். ரவிக்கு விஷயம் தெரியவர, அவர் உடன் வீடு திரும்பி போலீஸில் புகார் செய்தார்.

அவர்களும் வீட்டிற்கு வந்து விபரங்களைக் கேட்டு,  கண்டு பிடித்து விடுவதாக சொன்னார்
கள். இரண்டு நாளாகியும் எந்தத் தகவலும் தெரிய
வில்லை. ரவி  இன்ஸ்பெக்டரிடம்,  'இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை? என் மகன் உயிரோடு இருப்பானா' என்று கோபமாகக் கேட்டார்.

இன்ஸ்பெக்டர் சேகருக்கு குழந்தையை யாராவது  கடத்திச் சென்றிருப்பார்களோ என்ற சந்தேகம் வர, பக்கத்திலிருந்த சேரிப் பகுதிக்கு சாதாரண உடையில் தன் காரில் சென்று இறங்கி அங்குள்ளவர்களிடம்
பிரகாஷின் புகைப்படம் காட்டி விசாரித்தார். யாருக்கும் தெரியவில்லை.அடுத்து எங்கே செல்வது என யோசித்தவர் கண்களில் அந்த சிறுவன் தெரிந்தான்.

காரின் மறுபுறத்திலிருந்த படி நாயையும் சிறுவனையும் யாருமறியா வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தார்
இன்ஸ்பெக்டர். குழந்தை வசதியான நிலையில் வளர்ந்தவன் போல் தோன்ற இறங்கி அவனிடம் சென்று பெயர் கேட்டார். பிரகாஷ் என்றவன்..இந்த நாய்க்குட்டி அழகா இருக்குல்ல..என்றான் மழலையில்!

அதற்குள் பக்கத்து குடிசையி
லிருந்து வந்த ஒருவர்..கண்ணு சாப்பிட வரியாப்பா?..என்றவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

..ஏம்பா..குழந்தை உன்னுதா?..

..இல்லிங்க ஐயா. இந்தப் பிள்ளை யாருன்னு தெரியல. ரெண்டு நாளா என் வீட்டில
தான் இருக்கான். இந்த நாய்க் குட்டியும் ரெண்டு நாள் முன்னால சாயங்காலம் இந்தப் பையனோட விளையா
டிக்கிட்டிருந்தது. அந்தப்
பையனை கேட்டா ஒண்ணும் சொல்லத் தெரியல. இது யார் குழந்தைனு தெரியுங்களா?..

..இந்த வழியா ஸ்கூல் பஸ் எதுவும் போகுமா?..

..ஆமாங்க. ரெண்டு நாள் முன்னால அந்த தெருவில நடு ரோட்டுல ஒரு அம்மா மயக்கமா விழுந்துட்டதால போய்க்கிட்
டிருந்த கார் பஸ்ஸெல்லாம் நின்னுட்டதா என் சம்சாரம் சொல்லிச்சுங்க...

இன்ஸ்பெக்டருக்கு புரிந்து விட்டது. பிரகாஷின் அம்மா 'அவனுக்கு நாய்க்குட்டி என்றால் பிடிக்கும். அதன் பின்னாடியே போய்விடுவான்.எங்கே போனானோ' என்று சொன்னது நினைவுக்கு
வந்தது.

எல்லோரும் மயக்கமான பெண்ணின் மேல் கவனமாக இருக்க, தெருவில் நாய்க் குட்டியைப் பார்த்த பிரகாஷ் யாருமறியா வண்ணம் கீழே இறங்கியிருக்கிறான்.

...இந்தப் பையன் அவன் அம்மா அப்பாவைத் தேடலியா? எதுவும் சொல்லலியா?..

...சொல்லத் தெரியல சார். பார்க்க நல்ல பணக்கார வீட்டுப் பையன் மாதிரி இருந்தான். யாராவது பிள்ளை பிடிக்கறவங்க பிடிச்சிட்டு போயிடப் போறாங்கனு நான் கூட்டிக்கிட்டு வந்தேன். நாளும் பொழுதும் அந்த நாய் கூடவே விளையாடிட்டிருக்கான்...

...நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இந்தப் பையனை காணலனு கம்ப்ளெயிண்ட் வந்ததால இவனைத் தேடிக்கிட்டு வந்தேன். இந்த ஏரியால பிள்ளை பிடிக்கறவங்க இருக்கிறதா தகவல் வந்தது. ரெண்டு நாளா இவனை
பத்திரமா பார்த்துகிட்டதுக்கு நன்றிப்பா. பிரகாஷ் உங்க
வீட்டுக்கு போகலாமா? அம்மா அப்பா உனக்காக காத்துக்கிட்
டிருக்காங்க...

...இந்த நாய்க்குட்டியையும் அழைச்சுட்டு போலாமா?...

...கண்டிப்பா. இவங்ககிட்ட சொல்லிட்டு வாப்பா...

வீட்டுக்கு அவனை கொண்டு விட்டவர், ...உங்க பையனை கண்டுபிடிச்சு உங்ககிட்ட சேர்த்துட்டேன் சார். இந்த நாய்க்குட்டியைப் பார்த்துதான் அதனோட போயிருக்கான். அவனோட இந்த நாய்க் குட்டியையும் பத்திரமா பார்த்துக்கங்க சார்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கை_ஒளி

மலையரசனும் மந்திரவாதியும்..

அம்மா