இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்திரக்கதை

படம்
  நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை பதிவு எண்..2961 14.8.2021 இன்னா செய்தாரை... ஐந்தாவது படிக்கும் குமாரிக்கு மறுநாள் காலாண்டு பரீட்சை. படிப்பதற்கு நிறைய இருந்தது. அவள் அம்மா கண்ணாயி நான்கு வீடுகளில் வேலை செய்கிறாள்.தன் வீட்டு வேலை செய்ய நேரமில்லை. குமாரிதான் காலை எழுந்து வாசல் தெளிப்பதிலிருந்து சமையல் உட்பட அத்தனை வேலைகளும் செய்வாள். கண்ணாயிக்கு திருமணமாகி இசக்கிமுத்துவுடன் குடித்தனம் நடத்திய நாட்களில் மிக நல்லவனாக அன்போடும் காதலோடும்தான் இருந்தான். அதன் அடையாளமாக பிறந்தவளே குமாரி. இடையில் ஏற்பட்ட குடிப்பழக்கம் அவனை வேறு மனிதனாக மாற்றியது. தடுத்த கண்ணாயி அவனுக்கு எதிரியாகத் தெரிய, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுடன் வாழத் தொடங்கினான். எத்தனையோ பேர் கண்ணாயி சார்பாக அவனிடம் பேசியும் மாறாத இசக்கியை விலக்கிவிட்டு மகளுடன் தனியாக வாழத் தொடங்கினாள் கண்ணாயி.இசக்கியின் குணம் பற்றி அறிந்த குமாரி தான் பெரியவளானதும் அம்மாவை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணுவாள். குமாரிக்கு படிப்பு நன்றாக வந்தது. எதையும் ஒருமுறை படித்தால் அப்படியே மனனம் செய்யும் திறமை அவளுக்கு உண்

ஓடினாள்.. ஓடினாள்..

படம்
நிலாமுற்றம் கதைக்களம் சித்திரக்கதை 14.7.2021 ராதா பாலு எண்..2961 ஓடினாள்.. ஓடினாள்.. அமுதாவுக்கும் மாரி முத்துவுக்கும் திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன. குழந்தை குமுதாவுக்கு இரண்டு வயது. மாரி அந்த ஊர் மார்க்கெட்டில் கூலிவேலை செய்து வந்தான். அவனுக்கு கிடைத்த சம்பளத்தில் அமுதா குடித்தனம் செய்து வந்தாள். அவளும் பக்கத்தில் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்ததில் கிடைத்த பணம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. திடீரென்று வந்த கொரோனா எல்லார் வாழ்வையும் மாற்றியது போல் இவர்கள் வாழ்வையும் பாதித்தது. இருவருமே வேலைக்கு போக முடியாத நிலை. காய்கறிகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு கொடுத்து மாரி சம்பாதித்ததில் ஓரளவு சாப்பிட முடிந்தது. இப்படி ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை மாரியின் கெட்ட சகவாசத்தால் தாறுமாறாகிப் போனது. வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வீட்டுக்கு தராமல் குடித்து அழித்தான். அமுதாவின் அழுகை அவனை பாதிக்கவில்லை. நாளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்பதே தினமும் அமுதாவின் கவலையாக இருந்தது. அன்று மாலை குடி போதையில் வந்த மாரி அவனுடன் இருந்தவர்களிடம் அமுதாவையே விலை பேசியதைக் கேட்டபோது கூனிக் குற

நாயின் பாசம்

படம்
  நுண்கதை எண்..2961 30.6.2021 நாயின் பாசம் சுரேஷும் சுனிதாவும் ரூபி என்ற நாயை மிக ஆசையுடன் வளர்த்து வந்தார்கள். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களோடு விளையாடும்.  வெளியில் மாடிப்படி கீழேதான் படுத்திருக்கும். ரூபி சில மாதங்கள் முன்பு குட்டி போட்டபோது  அதிலிருந்த ஒரு ஆண் குட்டிக்கு ஜம்போ என்று பெயர் வைத்து வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் இவர்களிடம் ஒட்டிப் பழகியதோடு ரூபியுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று காலையிலிருந்து ரூபியையும் ஜம்போவையும் காணவில்லை. மாலை பள்ளியிலிருந்து வந்தபோது ஜம்போ மட்டுமே இருந்தது. முகம் வாடி வருத்தமாக இருந்தது.  இவர்களைப் பார்த்ததும் அழுவது போல் முனகிக் கொண்டே  சுரேஷின் பேண்டைப் பிடித்து கூட வரும்படி அழைத்து சென்றது.  இருவரும் ஒரு தண்ணீர் பாட்டில்,பிஸ்கட் பாக்கெட்டுடன் ஜம்போவுடன் சென்றார்கள்.  அடுத்த தெருவில்  சாலை ஓரத்தில் முனகியபடி ரூபி படுத்துக் கிடந்தது. சுரேஷ் அருகில் சென்று கூப்பிட்டு தடவினான்.  உடலெல்லாம் ரத்தம். காரில் அடிபட்டு‌ மூச்சு விட முடியாமல் தவித்தது. சுரேஷையும் சுனிதாவையும் பாதி மூடிய கண்களோடு அன்பொழுக