இணைந்த மன(த)ங்கள்

 நுண்கதை
இணைந்த மன(த)ங்கள்
29.3.2021
எண்..2961

"அமீத்பாய்..நல்லா இருக்கீங்களா?"

"வாப்பா மணிகண்டா. நல்லா இருக்கேன்பா. நீ நலமா? வீட்டில எல்லாரும் சுகமா?"

"எல்லாரும் நலம்.  ஒரு ஆஞ்சநேயர் படம் வேணும்."

"இந்தா இந்தப்படம் வச்சுக்க.  அதிவீரபராக்ரம ஆஞ்சநேயர். எந்த பயமும் கஷ்டமும் வராது."

"அதெப்படி பாய். நான் சொல்லாமலே கஷ்டம் வராதுனு சொல்றீங்க. கொஞ்ச நாளா மனசுல ஒரு குழப்பம். அதான்...ஹனுமான் படம் வாங்கி கும்பிடலாம்னு கேட்டேன்".

"நான் ஒரு சின்ன தோத்திரம் எழுதித் தரேன். அதை தினமும் சொல்லு".

"உங்களுக்கு எப்படி இதல்லாம் தெரியும்? நீங்க முகமதியராச்சே?"

"நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்க வீட்டு பக்கத்தில ஒரு கோவில் குருக்களய்யா குடியிருந்தாரு. நானும் அவர் பையன் சபேசனும் ஒரே வகுப்புல படிச்சிட்டிருந்தோம். நான் அவங்க வீட்டுலதான் நிறைய நேரம் இருப்பேன்.

"அந்த ஐயா நிறைய கதை சொல்வாரு. நல்ல நல்ல விஷயங்கள் சொல்வாரு. அவர்தான் இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு. நான் இந்தக் கடை வைக்க காரணமே அதுதான்."

"நீங்க சொல்றது கேக்கவே அதிசயமா இருக்கே? அந்த காலத்தில இப்படி ஒருத்தரா?"

"அவங்க என்னை வேறு மதத்தவனா பார்த்ததே இல்ல. அந்தம்மா என்னையும் அவங்க பையன் மாதிரிதான் நடத்துவாங்க. அவங்ககூட உக்கார்த்திதான் சாப்பாடு போடுவாங்க. அதனாலதான் அவங்க பழக்க வழக்கங்கள் எனக்கு தெரிஞ்சது."

"அவங்க இப்போ எங்க இருக்காங்க? உங்களுக்கு தொடர்பு இருக்கா?"

"சபேசன் அமெரிக்காவில் வேலையில இருக்கான். அவங்கப்பாவும் அங்க இருக்கற கோவில்ல குருக்களா இருக்கார். இப்பவும் நாங்க அடிக்கடி பேசிக்கறது உண்டு."

"நல்லது பாய். நான் கிளம்பறேன்."

"அந்த தோத்திரத்தை 45 நாள் சொல்லி ஆஞ்சநேயரை பூஜை பண்ணு. கஷ்டமெல்லாம் காணாமப் போகும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்திரக்கதை

மகளிர் தினம் - சித்திரக்கதை