அம்மா அம்மாதான்! எண்..2961





அம்மா அம்மாதான்!

எண்..2961

30.5.'21


அம்மா அம்மாதான்!


ஊருக்கு போய் வந்தது முதல் தருண் மனம் அம்மாவின் நினைவிலேயே இருக்கிறது. சென்ற மாதம் அவன் தாத்தா பாட்டியின் சதாபிஷேகம். வீடு முழுதும் உறவுகள்.தருணின் அக்காவும் திருமணமாகி வெளிநாட்டு வாசம்.  ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தருணுக்கு  திருமணமாகவில்லை. அவன் அம்மாபிள்ளை. 


சதாபிஷேகத்திற்கு உறவினர்கள் பலர் வந்திருந்ததால் வீட்டோடு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்திருந்தாள் அவன் அம்மா லட்சுமி. இன்றுதான் எல்லோரும் கிளம்பிச் சென்றபின் 'அப்பாடா' என்று சற்று கால் நீட்டி அமர்ந்தாள். தருண் வந்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். 


'என்னடா வேண்டும்? நாலஞ்சு நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டயா? அங்கதான் நீயே ஏதோ பண்ணி சாப்பிடறயே. '


'அட போம்மா. நான் அதுக்காகவா வந்தேன். உன் கையால ஒரு  பூண்டுரசம்  சாதம் சாப்பிடணும்.அந்த ருசி எதில?'


'அட அசடே..அதான் டல்லா இருக்கியா? இதோ சாயந்திரமே பண்ணிப் போடறேண்டா'.


'அம்மா..கூடவே அந்த கத்தரிக்காய் ரசவாங்கியும் பண்ணிடு.'இது பெண் பூரணியின் ஆர்டர்.


அம்மாவின் கைமணத்துக்கு இணையேது?




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மந்திரக்கதை

நுண்கதை