இடுகைகள்

சித்திரக்கதை

படம்
  சித்திரக்கதை எண்..2961 12.4.2021 கலெக்டர் முத்துமணி அன்று ஞாயிற்றுக் கிழமை. அழகாக ஓடிக் கொண்டிருந்த அந்த ஆற்றின் எதிர்க் கரையில் பெரிய தொழிற்சாலை  உருவாக நதியும் காற்றும் மாசுபட்டது. ஆனால் அந்த தொழிற்சாலை இன்று  பலருக்கு வேலை கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியது. அங்குதான் பெருமாள் வேலை செய்கிறான்.  ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவன் வலையில் சிக்கிய  மீன்களைப்  கூடையில் போடத் திரும்பும்போது  ஒரு ஆண் குழந்தை ஆற்று நீரில் விளையாடுவதைக் கண்டான். "யாரு கண்ணு நீ? உங்கப்பா எங்கே?" என்று கேட்டான். அந்தக் குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களைக் கேட்டபோது யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிட, அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் கிளம்பியபோது அந்தக் குழந்தை இவனுடன் தானும் வருவேன் என்பதை வேறு மொழியில் கூறியபடி கையைப் பிடித்துக் கொண்டது. கண்ணுக்கெட்டியவரை எந்த மனிதரையும் காணவில்லை.. யாரோ வெளிமாநிலத்தவர் இங்கு வந்தபோது குழந்தையை விட்டுச் சென்று விட்டார்களோ? பெருமாளுக்கு குழந்தையை உடன் அழைத்துச் செல்வதா, விட்டுப் போய்விடலாம...

முத்திரைக்கதை காணி நிலம்..7.3.'21

படம்
காணி நிலம் பார்வதி அந்த கிராமத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தவள். அவள் கணவர் முனுசாமி விவசாயி. நிறைய நிலங்கள் இருந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வாழ்வு. சொந்தமாக ஒரு சிறிய வீடு. ஒரே பிள்ளை வடிவேலன்.  அவனுக்குசிறுவயது முதலே பிடிவாதம் கோபம் எல்லாம் உண்டு. அவன் சகவாசம் சரியில்லை. பார்வதி எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. பத்தாம் வகுப்புவரை தட்டுத் தடுமாறி தேறியவன் எப்போதும் கண்டவர்களுடன் ஊர் சுற்றுவது, சிகரெட், மது என்று பொழுதைக் கழித்தான். வேலைக்குப் போக வேண்டிய வயதில் வீண் பொழுது போக்கி யதோடு விலை உயர்வான உடைகள், பைக் இவற்றை வீட்டில் பிடிவாதம் செய்து வாங்கி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஊரை சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயத்தில் அவனுக்கு சிறிதும் நாட்டமில்லை. முனுசாமிக்கு மகனைப் பற்றிய கவலையில் உடல்நிலை மோசமாகியது. பார்வதி மகனிடம் வேலைக்கு செல்லாவிட்டாலும் விவசாயம் பார்த்துக் கொள்ளும்படி கெஞ்சினாள். அவனோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஊதாரியாகத் திரிந்தான்.  முனுசாமி பார்வதியிடம் "பார்வதி. பூமிதான் நமக்கு தாய். விவசாயம்தான் நம் தொழில். ஒரு காணி நிலமாவது நமக்கு சொந்தமா...